வேன் கவிழ்ந்து 8 மாடுகள் காயம்
கருமத்தம்பட்டியில் வேன் கவிழ்ந்து 8 மாடுகள் காயம் அடைந்தன.
கோயம்புத்தூர்
கருமத்தம்பட்டி
கோவை-அவினாசி ேராட்டில் ஒரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அதில் 8-க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. அந்த வேன் கருமத்தம்பட்டி அருகே வந்த போது திடீரென வேனின் சக்கரங்களை இணைக்கும் அச்சு முறிந்தது. இதனால் டயர்கள் தனித்தனியாக ஓடியதால் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 8 மாடுகளும் படுகாயம் அடைந்தன. மேலும் வேனின் டிரைவர் மற்றும் உதவியாளரும் காயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மாடுகள் மற்றும், டிரைவர், உதவியாளரை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story