வேன் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் சாவு - 2 பேர் படுகாயம்


வேன் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் சாவு - 2 பேர் படுகாயம்
x

வேன் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை

பேரையூர்,

தென்காசி மாவட்டம் திர்தாராபுரம் ஆவுடையானூரை சேர்ந்தவர்கள் தமிழரசி (வயது 69), பாக்கியம்(62) மற்றும் ராஜாகண்ணன். இந்தநிலையில் பாக்கியத்துக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ய தங்கள் ஊரில் இருந்து மினி வேன் ஒன்றில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ராஜபாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டி.கல்லுப்பட்டி அடுத்து உள்ள டி.குன்னத்தூர் சாலை வளைவில் வரும்போது மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி இறந்து விட்டார். பாக்கியமும், ராஜாகண்ணனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story