'சங்கி' என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்த வானதி சீனிவாசன்
‘சங்கி’ என்ற வார்த்தையை இழிவுபடுத்தும் சொல்லாக பயன்படுத்துவதாக பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.
சென்னை,
பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"'சங்கி' என்ற வார்த்தையை இழிவுபடுத்தும் சொல்லாக பயன்படுத்துகின்றனர். 'சங்கி' என்ற ஒரு வார்த்தையை, எங்கள் கொள்கைகளுக்கு எதிராக நிற்க கூடியவர்கள், எங்களை விமர்சிக்க பயன்படுத்துகின்றனர். இந்த நாட்டை நேசிக்கும், நாட்டின் நலனில் சமரசம் செய்துக் கொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
தமிழகத்தில் பா.ஜனதா ஆதரவு பலமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக நடிகர் ரஜினி, கமல், விஜய் உள்பட யாராக இருந்தாலும் ஆதரவு கேட்போம். ஆதரவு கேட்பது எங்கள் கடமை. ஆதரவு கொடுப்பது அவர்கள் விருப்பம்." என்று கூறினார்.
Related Tags :
Next Story