நெல்லையில் இருந்து சென்னைக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் விழுப்புரம் வந்தது


நெல்லையில் இருந்து சென்னைக்கு       சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் விழுப்புரம் வந்தது
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இருந்து சென்னைக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் விழுப்புரம் வந்தது.

விழுப்புரம்

வந்தே பாரத் ரெயில்

சென்னை எழும்பூர்- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை தொடங்க இருக்கும் இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி, காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து தென்மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

8 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரெயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து நெல்லை வரை சோதனை ஓட்டமாக விடப்பட்ட நிலையில் நேற்று 2-வது நாளாக நெல்லையில் இருந்து மீண்டும் சென்னைக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது.

2-வது நாளாக சோதனை ஓட்டம்

இந்த ரெயில் நேற்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டது. விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக வந்த இந்த ரெயில் பகல் 12 மணியளவில் விழுப்புரம் ரெயில் நிலையம் வந்தடைந்தது. பின்னர் விழுப்புரத்தில் இருந்து 12.8 மணிக்கு அந்த ரெயில் புறப்பட்டுச்சென்றது.

இதில் ரெயில் என்ஜின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர்கள் மற்றும் பொறியாளர்கள், ரெயில்வே அலுவலர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். ரெயில் என்ஜின் முகப்பு பகுதியிலுள்ள பெட்டியில் மட்டும் 44 இருக்கைகளும், மற்ற பெட்டிகளில் 78 இருக்கைகளும் கொண்டதாக வந்தே பாரத் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும்போது உணவின் தேவை குறித்து கேட்டறிந்து, அதற்கேற்றவாறு பயணத்தின்போது உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story