வந்தேபாரத் ெரயிலுக்கு விருதுநகரில் வரவேற்பு


வந்தேபாரத் ெரயிலுக்கு விருதுநகரில்  வரவேற்பு
x

வந்தேபாரத் ெரயிலுக்கு விருதுநகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர்


வந்தேபாரத் ெரயிலுக்கு விருதுநகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வந்தேபாரத் ெரயில்

நாடு முழுவதும் நேற்று 9 வந்தேபாரத் ெரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த வகையில் தென் மாவட்ட மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை- சென்னை இடையேயான வந்தேபாரத் ெரயிலும் தொடங்கி வைக்கப்பட்டது.

நேற்று மதியம் 12.30 மணியளவில் நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ெரயில் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.18 மணிக்கு வந்தது. இந்த ரெயிலில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்தனர்.

வரவேற்பு

வந்தேபாரத் ெரயில் விருதுநகர் ெரயில் நிலையத்தில் நுழைந்தவுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினரும் பொது மக்களும் கரகோஷமிட்டு ெரயிலை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுெரங்கன் ெரயிலில் வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல். முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல ெரயில் நிலைய அதிகாரி கண்ணன், வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து ஆய்வாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ரெயில் வருகையை முன்னிட்டு விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் ெரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ெரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

1 More update

Next Story