கோவில்களில் வரலட்சுமி விரத பூஜை


கோவில்களில் வரலட்சுமி விரத பூஜை
x

கோவில்களில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வரலட்சுமி விரத பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சீனிவாசபெருமாள் சன்னதியில் சுமங்கலி பெண்கள் கலசத்தில் லட்சுமி திரு உருவத்தை வைத்து ஆவாகனம் செய்து, ஒன்று கூடி வரலட்சுமி விரத பூஜை செய்தனர். பூஜைகளை மணிகண்டன் அய்யர் நடத்தினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் பூசாரி தெருவில் உள்ள ஜெய்ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதபூஜை விழா, ஆரிய வைசிய மகாஜன சங்கம் மற்றும் மகிளா சபா சார்பில் நேற்று நடந்தது. இதில் வரலட்சுமி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு அர்ச்சனை, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக சாலையில் அபிராமபுரம் மேற்கு குடியிருப்பில் உள்ள வழக்கறிஞர் இல்லம், முத்துநகர் தொடக்கப்பள்ளி அருகே உள்ள மாத்வ சம்பிரதாய பிராமணர் வீடு மற்றும் அக்ரகாரத்தெருவில் உள்ள பிராமணர் வீடுகளில் சிறிய அளவிலான அலங்கார மண்டபத்தை தயார் செய்து மாவிலை தோரணங்களை கட்டி, அதில் வரலட்சுமி பிரதிமையை வைத்து, மலர்களால் அலங்கரித்து வைத்திருந்தனர். பெண்கள் தங்களது கைகளில் மஞ்சள் சரடு கட்டி வரலட்சுமி விரத பூஜையை நடத்தினர்.

அப்போது லட்சுமி தோத்திரங்களையும், லலிதா சகஸ்ர நாமத்தையும் பாராயணம் செய்தனர். சுமங்கலி பெண்கள் நேற்று முன்தினம் தொடங்கி வரலட்சுமி பூஜை வரை விரதமிருந்தனர். பின்னர் அனைவரும் வரலட்சுமி பிரதிமைக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் அட்சதை தூவி வழிபாடு நடத்தினர்.


Related Tags :
Next Story