வரலட்சுமி பூஜை
வரலட்சுமி பூஜை நடைபெற்றது
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி நகர் மற்றும் பல பகுதிகளிலும், வீடுகளிலும் வரலட்சுமி பூஜை விழா நடைபெற்றது. சிங்கம்புணரி வேளார் தெருவில் உள்ள பஜனை மடத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வரலட்சுமி பூஜையை தொடங்கினர். முன்னதாக மகாலட்சுமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பொன் நகைகள் சூட்டப்பட்டு, பட்டுடுத்தி சிறப்பு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும், பெண்கள் அம்பாள் பாடல்கள் பாடி பூஜை செய்தனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பஜனை மற்றும் சிறப்பு பூஜையை தொடர்ந்து பெண்களுக்கு வரலட்சுமி பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட மாங்கல்ய கயிறு, குங்குமம், வெள்ளி காசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story