வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
ஏலகிரி மலையில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஏலகிரிமலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சிதேவி வரவேற்றார்.
முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன், அத்தனாவூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுமன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து அத்தனாவூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தையும், ராயனேரி, கோட்டூர், பள்ளகனியூர் பகுதிகளில் நடைபெறும் சாலை பணிகளையும் தேவராஜி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.