வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
தியாகை ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே உள்ள தியாகை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீராம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை வரவேற்றார். முகாமில் பொதுநலம், குடும்ப நலம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுமார் 400-க்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தாய்மார்கள் 10 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் டாக்டர்கள் சிவராஜ், சந்தியா, மணிகண்டன், உமாநந்தினி, சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், சுகாதார செவிலியர் உஷா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் மலர்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் உதயநிலா சுரேஷ் நன்றி கூறினார்.