வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் அய்யாதுரை முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கமணி வரவேற்று பேசினார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் இதயம், காது மூக்கு தொண்டை, பல், கண் நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் ஜீவராஜ்பாண்டியன், சுஜிதா, ஜெயபிரபா, அபிலஷா, சித்தா மருத்துவ அலுவலர் வான்மதி, கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், யூனியன் ஆணையாளர் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் காளிமுத்து நன்றி கூறினார்.


Next Story