வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
x

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தா.பழூர் அருகே நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன் (வட்டார ஊராட்சி), விஸ்வநாதன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து அரசு திட்டங்களை விளக்கி பேசினார். முகாமில் 593 பயனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். 293 பேருக்கு ஆய்வக பரிசோதனைகள் செய்யப்பட்டன. 21 மகப்பேறு தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும், 18 பேருக்கு இ.சி.ஜி.யும், 30 பேருக்கு கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் பரிசோதனை செய்து கொண்டவர்களில் 7 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். 11 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் அடங்கிய பெட்டகமும், 4 கர்ப்பிணிகளுக்கு சித்த மருத்துவ சஞ்சீவினி பெட்டகமும், ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோயாளிகள் 7 பேருக்கு மக்களை தேடி மருத்துவ பெட்டகமும் வழங்கப்பட்டன.


Next Story