விரைவில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி


விரைவில்  ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்  வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி
x

விரைவில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டியளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரிஷிவந்தியம் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மாவட்ட கலெக்டரை சந்தித்து ரிஷிவந்தியம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக உருவாக்கிட வேண்டும் என வைத்திருந்த கோரிக்கையை ஏற்று வாணாபுரத்தை தலைமையிடமாக அறிவித்து ஒரு தனி தாலுகா உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே நேரம் ரிஷிவந்தியம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கொண்டு ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கிட வேண்டும் என கலெக்டாிடம் மனு கொடுத்துள்ளேன். மேலும் வருகிற 9-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் முதல்-அமைச்சரிடம் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்குவது தொடர்பான கோப்புகளை கொடுப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். ஆகவே அன்றைய தினம் முதல்-அமைச்சரிடம் இதுபற்றி வலியுறுத்தப்பட்டு வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா விரைவில் உருவாக்கப்படும் என்றார். அப்போது ரிஷிவந்தியம் தி.மு.க ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மடம் பெருமாள் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.


Next Story