வ.உ.சி. பூங்கா பறவைகள் பூங்காவாக மாற்றம்


வ.உ.சி. பூங்கா பறவைகள் பூங்காவாக மாற்றம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற முடிவு செய்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரி கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற முடிவு செய்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரி கூறினார்.

வன விலங்குகள் இடமாற்றம்

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு 5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது.

இங்கு புள்ளி மான்கள், குரங்குகள், முதலைகள், பாம்புகள் உள்பட 40 இனங்களில் 532 விலங்குக ள் வரை பராமரிக்கப்படுகின்றன.

தினமும் 350 பேர் வரையும், விடுமுறை நாட்களில் 2000 பேர் வரையும் வந்து சென்றனர்.

ஆரம்பத்தில் இந்த பூங்காவில் புலி உள்ளிட்ட விலங்குகள் இருந்தன. ஆனால் மாநகராட்சி பூங்காவில் கூண்டிற்குள் வைத்து சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளை பராமரிக்க மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் தடை வித்தது.

இதனால் பூங்காவில் இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் சென்னை வண்டலூர் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பறவைகள், பாம்புகள், குரங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மட்டுமே பரமரிக்கப்படுகிறது.

பூங்கா மூடப்பட்டது

இந்த நிலையில் கோவை வ.உ.சி. பூங்காவை விரிவுபடுத்து வதுடன், அங்கு பராமரிக்கப்படும் வன விலங்குகளுக்கு தேவையான இடவசதி, கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய வனஉயிரின பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சியை அறிவுறுத்தியது.

அதன்படி உயிரியல் பூங்காவை மேம்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்பட வில்லை. எனவே பூங்காவிற்கான அனுமதியை மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் புதுப்பிக்க மறுத்து விட்டது.

இதை தொடர்ந்து கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பறவைகள் பூங்கா

இந்த நிலையில் வ.உ.சி. பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் பங்களிப்புடன் கோவை வ.உ.சி. பூங்காவை பறவைகள் பூங்கா வாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 2 ஏக்கரில் அமையும் இந்த பூங்காவில் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் இடம் பெறும். பறவைகள், விலங்குகள் குறித்து குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு செயலிகளும் நிறுவப்படும். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.


Next Story