வீர நரசிம்ம பெருமாள் கோவில் குடமுழுக்கு
மங்கைமடம் வீர நரசிம்ம பெருமாள் கோவில் குடமுழுக்கில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு பகுதியில் பஞ்ச (ஐந்து) நரசிம்மர் கோவில்கள் உள்ளன. இதில் 2-வது கோவிலாக மங்கை மரம் வீர நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 17-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று மேளம் தாளம் முழங்க பட்டாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய யாக குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் நரசிம்மர், தாயார், கொடிமரம், ராஜ கோபுரம் உள்ளிட்டவற்றுக்கு பூஜைகள் நடந்தன. பின்னர் ஒரே நேரத்தில் திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் ஸ்தலத்தார் நாராயணன் அய்யங்கார், ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பாலசுப்பிரமணியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக குடமுழக்கில் பங்கேற்பதற்காக திருமங்கை ஆழ்வாரை பக்தர்கள் மேள தாளம் முழங்கிட திருநகரி கல்யாண ரங்கநாதர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.