முத்தூர் பகுதிகளில் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை


முத்தூர் பகுதிகளில் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை
x

முத்தூர் பகுதிகளில் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர்

முத்தூர் பகுதிகளில் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாகுபடி

முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல்,பூமாண்டன் வலசு, வேலம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாகும். கரும்பு, மஞ்சள், வாழை, நஞ்சை சம்பா நெல், எண்ணெய் வித்து பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீர் ஆகியவற்றை பயன்படுத்தி தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் மற்றும் கீரை வகைகள் சாகுபடி செய்கிறார்கள்.இப்பகுதி விவசாயிகள் சுமார் ½ ஏக்கர் முதல் 2 ஏக்கர் பரப்பளவு வரை தனியாகவும், ஊடுபயிராகவும் பரவலாக பீர்க்கங்காய் சாகுபடி செய்து உள்ளனர்.

இதன்படி ஒரு ஏக்கர் பீர்க்கங்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, அடி உரம் இடுதல், விதை ஊன்றுதல், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களைக்கொல்லி பராமரித்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை பணிகள் என மொத்தம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.

இது பற்றி பீர்க்கங்காய் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:-

ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை

தற்போது வயல்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பீர்க்கங்காய்கள் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பீர்க்கங்காய்கள் முத்தூர், நத்தக்காடையூர், அரச்சலூர், காங்கயம், வெள்ளகோவில், சிவகிரி, கந்தசாமி பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தினசரி கடைகள் காய்கறி விற்பனை கடைகள் மற்றும் வார சந்தைகளில் எடைக்கு ஏற்ப ஒரு பெரிய பெட்டி ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் சிறிய பெட்டி ரூ.200 முதல் ரூ.250 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story