காய்கறி சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்


காய்கறி சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்
x

விழுப்புரம் எம் ஜி சாலையில் காய்கறி சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் மொத்த காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கிருந்து சில்லரை காய்கறி வியாபாரிகள், காய்கறிகளை வாங்கி வந்து விழுப்புரம் எம்.ஜி.சாலையில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜானகிபுரத்தில் உள்ள மொத்த காய்கறி வியாபாரிகள் சிலர் நேற்று திடீரென எம்.ஜி.சாலையில் வியாபாரம் செய்வதற்காக தற்காலிகமாக கடைகளை போட்டு காய்கறிகளை கொண்டு வந்தனர். இதையறிந்ததும் அங்குள்ள சாலையோரங்களில் சிறு வியாபாரம் செய்து வரும் சில்லரை காய்கறி வியாபாரிகள், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மொத்த வியாபாரிகளிடம் வாக்குவாதம் செய்து அவர்களது கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மொத்த வியாபாரிகள், தாங்கள் அமைத்த தற்காலிக கடைகளை அகற்றிக்கொள்வதாகவும், ஜானகிபுரத்திலேயே காய்கறி விற்பனை செய்து கொள்வதாகவும் கூறியதன்பேரில் சிறு வியாபாரிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story