ரூ.1,100 கோடியில் சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்க திட்டம்-பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்


ரூ.1,100 கோடியில் சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்க திட்டம்-பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த கால்வாய்களை ரூ.1,100 கோடியில் சீரமைக்க திட்டமிட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

சேதமடைந்த கால்வாய்களை ரூ.1,100 கோடியில் சீரமைக்க திட்டமிட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் கடைமடை வரை தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறப்பதற்கு முன் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், பெயரளவிற்கு மட்டும் சீரமைக்கப்படுகிறது.

மேலும் பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் காண்டூர் கால்வாயும் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதே நிலைமையில் தான் ஆழியாறு அணை மூலம் பாசனம் பெறும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்களும் உள்ளன. எனவே கால்வாயை தூர்வாரி சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று பி.ஏ.பி. விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீரின் வேகத்தால் சேதம்

ஆண்டுதோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் வழக்கம் போல் கால்வாய்கள் தூரவாரப்பட்டு வருகிறது. இதை தவிர மெயின் கால்வாய், பிரதான கால்வாய், கிளை கால்வாய், பகிர்மான கால்வாய்கள் அனைத்தும் உலக வங்கி நிதி உதவியுடன் 1997-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரைக்கும் முதற்கட்டமாக அதிகமாக சேதமடைந்த பகுதிகள் கான்கீரிட் அமைத்து சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு விடுப்பட்ட சேதமடைந்த பகுதிகள் 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மீண்டும் சீரமைக்கப்பட்டது. முதற்கட்டமாக கால்வாய்கள் சீரமைத்து 25 ஆண்டுகள் வரை ஆகிவிட்டது. இதனால் பிரதான கால்வாய், கிளை கால்வாய், பகிர்மான கால்வாய்கள் அனைத்தும் நிறைய இடங்களில் மோசமாக சேதமடைந்து உள்ளது. கால்வாயில் ஆண்டிற்கு இரு போகத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. ஆண்டிற்கு 10 மாதங்கள் தண்ணீர் செல்வதாலும், நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் கால்வாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

விரிவான திட்ட அறிக்கை

இதன் காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் பாதிப்பு உள்ளது. கால்வாய்களை சீரமைக்க தற்போது நிதி இல்லை. இதனால் கால்வாய்களை முழுமையாக சீரமைக்க சுமார் ரூ.1100 கோடிக்கு ஒரு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. எந்த ஒப்பந்ததாரர் பணிகளை எடுக்கிறாரோ அவர் காண்டூர் கால்வாய் முதல் அனைத்து கால்வாய்களையும் சீரமைக்க விரிவாக திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது உலக வங்கி, மத்திய அரசின் நிதி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி இதுபோன்ற நிதிகளை பெற்று முழுமையாக சீரமைக்கப்பட உள்ளது. அந்த நிதி வந்ததும் கால்வாய்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது டெண்டர் இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story