வாகன சோதனையில் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார்


வாகன சோதனையில் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார்
x

அவிகாசி அருகே தனியார் வாகனத்தில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனம் போல் லைட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி வாகன சோதனையின் போது வசூல்வேட்டையில் ஈடுபட்ட போலீசார் யார்? என்று காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

திருப்பூர்

அவிகாசி அருகே தனியார் வாகனத்தில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனம் போல் லைட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி வாகன சோதனையின் போது வசூல்வேட்டையில் ஈடுபட்ட போலீசார் யார்? என்று காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வசூல்வேட்டை

திருப்பூர் -அவினாசி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு வாகனத்தை பயன்படுத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை என்ற பெயரில் பணம் வசூலித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனுக்கு சிலர் புகார் தெரிவித்து இருந்தனர். இது குறித்து விசாரிக்குமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடந்தது.

விசாரணையில் கடந்த மாதம் 22-ந் தேதி அவினாசி போலீஸ் நிலையத்திற்கு உரிய நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஊத்துக்குளியில் ஏற்பட்ட விபத்தில் சேதம் அடைந்தது. இதையடுத்து அந்த வாகனம் சரி செய்வதற்காக அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் விடப்பட்டுள்ளது.

இதனால் ரோந்து வாகனம் இல்லாததால் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் 2 பிரிவுகளாக இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அதன்பின்னர் இருசக்கர வாகனத்தில் அவர்கள் ரோந்து செல்ல வில்லை. அதற்கு பதிலாக அந்த 6 பேர் கொண்ட குழுவில் இருந்த ஒரு பெண் போலீசின் உறவினருக்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க ரோந்துக்கு பயன்படுத்திய தனியார் வாகனத்தில் போலீஸ் வாகனம் ேபால் லைட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி தீவிர வசூலில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிக்குவது யார்?

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்ததும் வசூல் வேட்டைக்கு பயன்படுத்திய தனியார் வாகனத்தை மறைத்து வைத்து இருப்பதும் தெரியவந்தது. விசாரணையின் முடிவில் எந்தெந்த போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.


Related Tags :
Next Story