சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்


சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்
x

உடுமலையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர்

தளி

உடுமலையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு, தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், ஜவுளி, மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற கனரக லாரிகள் பிரதான மற்றும் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்து நெருக்கம் மிகுந்த பகல் வேளையில் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை பின்பற்றாமல் வாகனங்களை கொண்டு வந்து சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.

நடவடிக்கை

மேலும் சாலையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாற்று வழியை தேடிச் செல்ல வேண்டிய சூழலும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் காலநேர விரையம் எரிபொருள் செலவும் கூடுதலாக ஏற்படுகிறது.எனவே போக்குவதற்கு இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் கனரக வாகனங்கள் பகல் வேளையில் நகரப் பகுதியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியமாக உள்ளது என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.



Next Story