பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு; விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்


பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு; விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்
x

சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அணிவகுத்ததால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிப்பவர்களும், சென்னையில் தங்கி பணிபுரிபவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தங்கள் சொந்த கார்களில் குடும்பத்துடன் பலர் பயணம் செய்கின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பொங்கல் சிறப்பு பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் பெரும்பாலானோர் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அணிவகுத்ததால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உள்ள 8 வழிகளில், சென்னையில் இருந்து வரும் வாகனங்களுக்காக 6 வழிகள் திறந்து விடப்பட்டுள்ளன. அங்கு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.




Next Story