லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்


லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
x

லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்

திருவாரூர்

லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்குவழி சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பாலத்தை மையமாக கொண்டு திருவாரூர் சாலை, மன்னார்குடி சாலை, வடபாதிமங்கலம் சாலை, கொரடாச்சேரி சாலை என நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலைகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மினி பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையிலும் சென்று வரக்கூடிய வாகனங்கள் சில தாறுமாறாக செல்லும் நிலை காணப்படுகிறது. அப்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கட்டுப்படுத்த வேண்டும்

மேலும் லெட்சுமாங்குடி பாலத்தில் உள்ள வளைவில் வாகனங்களை திருப்பக்கூடிய இடத்தில் சிலர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருப்பதால் அது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story