மலைப்பாதையில் முகப்புவிளக்கு ஒளிர அணிவகுக்கும் வாகனங்கள்
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் மலைப் பாதையில் இரவு நேரத்தில் ஒளிவீசியபடி வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் மலைப் பாதையில் இரவு நேரத்தில் ஒளிவீசியபடி வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
ஊட்டிக்கு பயணம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கியதும், பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் பலரும் தங்களின் சொந்த வாகனங் களில் வருவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல் லும் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் உள்ளது. எனவே எங்கிருந்து வாகனங்கள் வந்தாலும் மேட்டுப் பாளையம் வழியாக மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகள் வழியாக ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களுக்கு பலரும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
முகப்பு விளக்கு
இதனால் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்கள் தொடர்ந்து செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதை ஒழுங்குபடுத்துவதில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரங்க ளில் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைப்பாதையில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் அணிவித்து வந்து செல்கின்றன.
அதை டிரோன் கேமரா மூலம் புகைப்படம் எடுத்த போது மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் மின் விளக்கு பொருத்தியது போன்று அழகாக காட்சி அளிக்கிறது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.