வேலூரில் 30.70 மில்லி மீட்டர் மழை பதிவு


வேலூரில் 30.70 மில்லி மீட்டர் மழை பதிவு
x

வேலூரில் 30.70 மில்லி மீட்டர் மழை பதிவு ஆகி உள்ளது.

வேலூர்

வேலூரில் 30.70 மில்லி மீட்டர் மழை பதிவு ஆகி உள்ளது.

வேலூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மழை கொட்டித்தீர்த்தது. அதில் வேலூர் அருகே முள்ளிப்பாளையத்தில் ஒருவரின் கூரை வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் திடீரென கீழே விழுந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வேலூர்- 30.70, காட்பாடி- 14, அன்பூண்டி- 5.20, குடியாத்தம்- 1, மேலாலத்தூர்- 1.20


Next Story