வேலூரில் மோட்டார் சைக்கிளுடன் சாலை அமைத்த விவகாரம் - உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
வேலூரில் மோட்டார் சைக்கிளுடன் சாலை அமைத்த விவகாரத்தில் உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
வேலூர்,
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும், மோட்டார் சைக்கிளை கூட அகற்றாம் சாலை போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் வேலூரில் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் சிமெண்ட் சாலை அமைத்த விவகாரத்தில் உதவி பொறியாளர் பழனியை மாநகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story