வேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


வேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 147 பேரிடம் விசாரணை முடிந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை,

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், ஊரைச் சுற்றி போலீஸ் பூத் அமைத்து, மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையை ஏற்படுத்தியிருப்பதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 147 பேரிடம் விசாரணை முடிந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து வாட்ஸ் அப்பில் சில ஆடியோக்கள் பகிரப்பட்டதாக தெரியவந்ததையடுத்து, வேங்கைவயலை சேர்ந்த காவலர் முத்துராஜா, கண்ணதாசன் ஆகிய இருவரும், குரல் மாதிரி பரிசோதனைக்காக, சென்னை அழைத்து வரப்பட்டு மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் சோதனை கூடத்தில் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே, வேங்கைவயல் வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர், மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், வேங்கைவயல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், ஊரைச் சுற்றி போலீஸ் பூத் அமைத்து, மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் தெரிவித்ததார்.




Next Story