வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 41 பேர் கைது
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கில் 100 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுக்கோட்டை திலகர் திடல் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மறியலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் பெண்கள் உள்பட மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story