வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி


வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்காக பயன்படுத்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி, கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை


நாடாளுமன்ற தேர்தலுக்காக பயன்படுத்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி, கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் பயன்படுத்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் ஒரு குடோனில் வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீசார் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து, மாதிரி வாக்குப்பதிவு மற்றும் பதிவு செய்யப்பட்டு வாக்குகளை சரிபார்த்தல் பணியும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் உதவி கலெக்டர் யுரேகா, தேர்தல் தனி தாசில்தார் விஜயராகவன், தாசில்தார் மகேந்திரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story