39 பன்றி பண்ணைகளில் கால்நடைத்துறையினர் ஆய்வு


39 பன்றி பண்ணைகளில் கால்நடைத்துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொடர்பாக 39 பன்றி பண்ணைகளில் கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோயம்புத்தூர்

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொடர்பாக 39 பன்றி பண்ணைகளில் கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

நீலகிரி மாவட்டம் குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறது. இதே போல் முதுமலைப்பகுதியில் காட்டுப்பன்றிகள் உயிரிழந்து வருகின்றன.அவற்றை ஆய்வு செய்ததில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் காரணமாக பன்றிகள் உயிரிழந்தது கண்டுபிடிக் கப்பட்டது.

இதையடுத்து, பன்றிகளை விற்பனைக்காக வெளியில் கொண்டு செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது.

மேலும், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்எச்சரிக்கை

கேரளாவிற்கு பன்றிகளை உயிருடன் அல்லது இறைச்சியாக கொண்டு செல்ல வரும் 16-ந் தேதி வரை மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால், நாகலாந்திற்கு கோவையில் இருந்து அதிக அளவில் பன்றிகள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்ச லை தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி கள் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

அதன்படி, கோவை, பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட 39 இடங்களில் உள்ள பன்றி பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் நேரடியாக சென்று ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த பண்ணைகளில் முன் எச்சரிக்கையாக பன்றிகளின் எச்சங்கள், கழிவு மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story