கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், இருக்கூரில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் இருக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்றனர். இம்முகாமில் கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்கப்பட்டது. சினை பருவத்தில் உள்ள பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல்கள் செய்யப்பட்டன. சினை பிடிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகள், கால்நடைப்பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி பிரிவின் கேளா ஒலி ஆய்வுக் கருவியின் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 49 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கவலைகளும், 315 கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், தனவேல், மணிவேல் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் நாமக்கல் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) நடராஜன், திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குனர் அருண் பாலாஜி, கால்நடை நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story