ரூ.34¼ லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி


ரூ.34¼ லட்சத்தில் கால்நடை ஆஸ்பத்திரி
x

முத்துப்பேட்டையில் ரூ.34¼ லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை ஆஸ்பத்திரியை கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்தார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:


முத்துப்பேட்டையில் ரூ.34¼ லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை ஆஸ்பத்திரியை கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்தார்.

கால்நடை ஆஸ்பத்திரி திறப்பு விழா

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மருதங்காவெளி பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.34.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது.

இதை தொடர்ந்து புதிய கால்நடை ஆஸ்பத்திரி திறப்பு விழா நடந்தது. விழாவில் செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் சாருஸ்ரீ கலந்து கொண்டு கால்நடை ஆஸ்பத்திரியை திறந்து வைத்து மருந்து இருப்பு விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

கோமாரி நோய் தடுப்பூசி

பின்னர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் 300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி, உதவி இயக்குனர் ராமலிங்கம், உதவி டாக்டர்கள் மகேந்திரன், ராஜசேகர், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி, பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், கவுன்சிலர் லட்சுமி செல்வம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மாரிமுத்து, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் ஆய்வு

இதை தொடர்ந்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இயங்கிவரும் சேவை மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் பார்வையாளர்கள் மற்றும் உடன் தங்கும் நபர்கள் தங்குவதற்காக ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் செல்லும் வடிகாலை பார்வையிட்டு கழிவுநீர் தேங்காமல் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜோசப்ராஜ், தாசில்தார் நக்கீரன் உள்பட அரசு அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.


Next Story