கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்
கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் மாநில அளவில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்படி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மகளிரணி செயலாளர் பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர்கள் முனீஸ்வரி, கங்காதேவி முன்னிலை வகித்தனர். அழகர் வரவேற்றார். முத்துசாமி, சேகர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கால்நடை ஆய்வாளர் பயிற்சியை தொடங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். கோர்ட்டு தீர்ப்பின்படி நியாயமான சம்பளம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். சாத்தையா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story