கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தில் கால்நடை தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தில் கால்நடை தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தநாயகி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர்கள் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, அகத்தியன் ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடைகளுக்கு தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மாடுகளுக்கு குடல்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி, தாது உப்புக் கலவை ஆகியவை வழங்கப்பட்டது. இதில் 52 மாடுகள், 418 வெள்ளாடுகள், 355 ஆடுகள், 21 செல்லப் பிராணிகள்,192 கோழிகள் உள்ளிட்டவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கால்நடை ஆய்வாளர்கள் வீரன், முனீஸ்வரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் அழகுமீனாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

1 More update

Next Story