ராஜராஜ சோழன் குறித்த வெற்றிமாறனின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது; கி.வீரமணி பேட்டி


ராஜராஜ சோழன் குறித்த வெற்றிமாறனின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது; கி.வீரமணி பேட்டி
x

ராஜராஜ சோழன் குறித்த வெற்றிமாறனின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது என்று கி.வீரமணி கூறினார்.

திருச்சி

திருச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியாரின் கருத்துக்கள் தற்போது தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. தற்போதுதான் பெரியாரின் கருத்துக்களுக்கான தேவை அதிகம் இருக்கிறது. மதவாதம், சாதியவாதம் தலைதூக்கி ஆடுகிறது. அனைவருக்கும் கல்வி என்பதை மறுக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் வேதபாடசாலையில் குறிப்பிட்ட அளவு வேதம் படித்தாலே அவர்கள் 10-வது, 12-வது படித்ததற்கு சமம். அவர்கள் நேரடியாக பொறியியல் கல்லூரியில் சேரலாம். அதை எந்த கல்லூரியும் மறுக்க முடியாது என்று கூறி இருக்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது. இப்போதுதான் கல்வியின் தரம் தாழ்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில்தான் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் குற்றம் குறைகளை கூறுகிறார்கள். அவர்களிடம் இருந்து இந்த அரசை காக்க வேண்டியது திராவிட இயக்கங்களின் கடமையாக உள்ளது.

சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடந்ததை கடந்த கால அரசு கண்டும் காணாமல் இருந்தது. தற்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து இருப்பதை பாராட்டுகிறோம். ஆனால் இது கண் துடைப்பு நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது. அவர்களுடைய கருத்தை வைத்து வெறித்தனத்தை பரப்பலாம் என சிலர் முயற்சித்தால் அந்த பருப்பு இங்கு வேகாது. தேர்தல் ஆணையம் யாருடைய கைப்பாவையாக உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story