துணைத்தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு


துணைத்தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 1 Aug 2023 1:03 AM IST (Updated: 1 Aug 2023 1:19 AM IST)
t-max-icont-min-icon

செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து துணைத்தலைவர் உள்பட 6 கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து துணைத்தலைவர் உள்பட 6 கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

பேரூராட்சி கூட்டம்

செட்டியார்பட்டி பேரூராட்சியில் சாதாரண கூட்டம் தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத்தலைவர் விநாயகமூர்த்தி பேசியதாவது:- எந்தவித மக்கள் திட்டப்பணிகள் குறித்து தலைவர் கவுன்சிலர்களிடம் தெரிவிப்பதில்லை. புதிதாக திட்டப்பணிகள் குறித்து முறையாக பதில் அளிப்பதில்லை. இதேபோல அனைத்து வார்டுகளிலும் உள்ள குறைகள் சம்பந்தமாக கவுன்சிலர்கள் தெரிவித்தாலும் பதில் அளிப்பதில்லை.

வெளி நடப்பு

தற்போது சாஸ்தா கோவில் கூடுதல் நீரோட்டம் நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு பெறப்படும் நிதி குறித்து முறையாக தெரிவிக்கவில்லை என கூறி வெளிநடப்பு செய்தார். இவருக்கு ஆதரவாக பெண் கவுன்சிலர்கள் பொண்ணு லட்சுமி, குமரேஸ்வரி, முத்துலட்சுமி, முருகேஸ்வரி, மயிலம்மாள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story