விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
x

வந்தவாசி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கூட்டுச்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊடக பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வந்தவாசி நகர செயலாளர் இனியவன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை பொதுவெளியில் மானபங்கம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும்,

மத்திய அரசை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்பாட்டத்தில் இருதயராஜ், பாலாஜி, சவுந்தரராஜன், பாண்டியன், ஸ்ரீதர், கீர்த்திவாசன், சந்துரு, பாபு, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story