கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
x

திருப்பூர் கோவில்களில் நேற்று விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர்-சிறுமிகளுக்கு நாக்கில் ஓம் என்று எழுதி ஆசீர்வதித்தனர்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கோவில்களில் நேற்று விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர்-சிறுமிகளுக்கு நாக்கில் ஓம் என்று எழுதி ஆசீர்வதித்தனர்.

வித்யாரம்பம்

குழந்தைகள் முதன் முதலில் பள்ளிக்கல்வியை தொடங்குவதற்காக கோவில்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் விஜயதசமியன்று வித்யாரம்பம் என்னும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

அவ்வாறு விஜயதசமி நாளான நேற்று திருப்பூர் ஈஸ்வரன் கோவில், காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில் உள்பட கோவில்களில் வித்யாரம்பம் என்னும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாவில் ஓம்காரம் எழுதி

தட்டில் நெல்மணிகள் அல்லது அரிசிகளை பரப்பி எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கலை மற்றும் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்கள், இலக்கியவாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் குழந்தைகளின் கைவிரல் பிடித்து அகரம் எழுதி, தர்ப்பபுல்லை தேனில் தொட்டும்மற்றும் தங்க வேலால் குழந்தைகளின் நாவில் 'ஓம்' என்று எழுதி அட்சதை தூவி கல்வியில் சிறந்து விளங்க ஆசிர்வதித்தனர்.

திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் குழந்தைகள், பெற்றோர்களுக்கு கல்கண்டு சாத பிரசாதமும், எழுதுபலகை, எழுதுகோல், அரிச்சுவடி, ஓவிய புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகத்தொகுப்பு வழங்கப்பட்டது. அதுபோல் திருப்பூரில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.



Related Tags :
Next Story