விஜய் அண்ணா செய்வது மிகவும் சந்தோஷம் - அகரம் அறக்கட்டளை பரிசு வழங்கும் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு


விஜய் அண்ணா செய்வது மிகவும் சந்தோஷம் -  அகரம் அறக்கட்டளை பரிசு வழங்கும் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு
x

நடிகர் விஜய் பயிலரங்கம் துவங்கியுள்ளது ரொம்ப மகிழ்ச்சியானது என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

சென்னை,

அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அகரம் அறக்கட்டளை பரிசு வழங்கும் விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-

நடிகர் விஜய் பயிலரங்கம் துவங்கியுள்ளது ரொம்ப மகிழ்ச்சியானது. இதுவும் பத்தாது ஏனென்றால் அவ்வளவு தேவை உள்ளது, விஜய் அண்ணா செய்வது மிகவும் சந்தோஷம் என்றார்.

முன்னதாக, முதலிடம் பிடித்த மாணவர்களாக இல்லாமல், கல்வி கற்ற சூழ்நிலையை பொறுத்து மாணவர்களுக்கு உதவுகிறோம் என நடிகர் சூர்யா கூறினார்.


Next Story