கோவையில் விஜய் ரசிகர்கள் உற்சாகம்


கோவையில் விஜய் ரசிகர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 20 Oct 2023 2:15 AM IST (Updated: 20 Oct 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியானதையொட்டி கோவையில் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் சாலைகளில் தேங்காய்களை உடைத்து கொண்டாடினர்.

கோயம்புத்தூர்
தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியானதையொட்டி கோவையில் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் சாலைகளில் தேங்காய்களை உடைத்து கொண்டாடினர்.


இனிப்பு வழங்கி மகிழ்ச்சி


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரான லியோ திரைப்படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.


கோவையில் 100 தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியானது. அங்கு அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் மேள, தாளங்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் தியேட்டர்கள் உள்ள பகுதி விழாக்கோலம் பூண்டது.


தேங்காய் உடைத்து ஆரவாரம்


கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தியேட்டரில் லியோ திரைப்படத்தை வரவேற்று பிரமாண்ட பேனர்களை வைத்தனர். மேலும் அதற்கு பாலாபிஷேகம் செய்ததுடன், சாலையில் தேங்காய்களை உடைத்தனர். தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் இணைந்து ஆடல், பாடல்களுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர்.


இதேபோன்று கருமத்தம்பட்டி, நீலாம்பூர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் கொண்டாட்டம் களைகட்டியது. அங்கு லியோ திரைப்பட பிரமாண்ட பேனருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சாலையில் 500 தேங்காய் உடைத்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.



1 More update

Next Story