விஜய் விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவ குழு பொறுப்பாளர்கள் தேர்வு


விஜய் விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவ குழு பொறுப்பாளர்கள் தேர்வு
x

விஜய் விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவ குழு பொறுப்பாளர்கள் தேர்வு

ஈரோடு

பவானி

பவானி விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள விஜய் விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்தில் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுக்கான மாணவர் குழு பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கூட தலைவர் எம்.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பள்ளிக்கூட தாளாளர் கே.பி.பழனிச்சாமி, பொருளாளர் என்.தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளிக்கூட மாணவர் குழு தலைவர், துணைத்தலைவர், கல்வி குழு செயலாளர், நற்பண்பு செயலாளர் என பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என 4 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் பள்ளிக்கூட இயக்குனர் ராஜசேகர் மற்றும் பள்ளிக்கூட முதல்வர் பிரான்சிஸ், துணை முதல்வர் சசிகலா மற்றும் இயக்குனர்கள் ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.


Next Story