விஜயகாந்த் பிறந்த நாள் விழா
வள்ளியூரில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூரில் தே.மு.தி.க. நிறுவனர் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் தலைமையில், வள்ளியூர் இசக்கியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோட்டை அருளையா தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. பின்பு கோர்ட் ரோடு, ராதாபுரம் ரோடு, வடக்கு ரதவீதி, அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ஆகிய பகுதிகளில் தே.மு.தி.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் விஜயகணேசன், பொருளாளர் ஆல்வின் ராஜா டேவிட், துணை செயலாளர் அபிஷேக், ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் வடக்கு ஜெயசேகர பாண்டியன், வள்ளியூர் தெற்கு வெள்ளத்துரை, ராதாபுரம் கிழக்கு இசக்கிமுத்து, ராதாபுரம் மேற்கு துரைப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.