புத்தாண்டில் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்...!
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்.
சென்னை,
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அதேபோன்று 2023-ம் ஆண்டு புத்தாண்டில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வருகை தர உள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் இருந்துவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை முதலே குவிந்தனர். பின்னர், காலை 11 மணி அளவில் விஜயகாந்த் தொண்டர்கள் சந்தித்தார். அப்போது கேப்டன்..கேப்டன்.. என்று மூழங்கி உற்சாகத்துடன் அவரை தொண்ர்கள் சந்தித்தனர்.