மகேந்திரகிரிஇஸ்ரோ மையத்தில் விகாஷ் என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரிஇஸ்ரோ மையத்தில் விகாஷ் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.
திருநெல்வேலி
பணகுடி:
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் என்ஜின், ஸ்கிராம் ஜெட் என்ஜின், விகாஷ் என்ஜின் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி விகாஷ் என்ஜினின் 80 டன் எடையை மேல் நோக்கி உந்துவதற்கான த்ரோட் லிங் டெமான்ஸ்ட்ரேஷன் வெப்ப சோதனை 43 வினாடிகள் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும், தொடர்ந்து அடுத்தடுத்து வினாடிகள் அதிகரிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெறும் என்றும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story