ரூ.20 கோடியில் விளாமரத்தூர் குடிநீர் திட்டம்


ரூ.20 கோடியில் விளாமரத்தூர் குடிநீர் திட்டம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ரூ.20 கோடியில் விளாமரத்தூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி பவானி ஆற்றை கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ரூ.20 கோடியில் விளாமரத்தூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி பவானி ஆற்றை கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டார்.

குடிநீர் திட்டம்

மேட்டுப்பாளையம் அருகே விளாமரத்தூர் கஞ்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியது.

இந்த நிலையில் விளாமரத்தூர் குடிநீர் திட்டத்திற்கு ஆதாரமாக விளங்கும் கஞ்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றை பார்வையிட மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று விளாமரத்தூருக்கு வந்தார். அவர் குடிநீர் திட்டத்தை செயல்ப டுத்துவது குறித்து நகராட்சி ஆணையர் வினோத்திடம் கேட்டறிந்தார்.

அறிவுசார் மைய கட்டிடம்

பின்னர் அவர், சத்தியமூர்த்தி நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்ட பணிகளுக் காக தோண்டப்பட்ட குழிகளால் பழுதடைந்த சாலையை பார்வையிட்டார்.

மேலும் அவர் அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, இன்னும் ஒரு வார காலத்திற்குள் சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் மணி நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 கீழ் ரூ.1 கோடியே 87 லட்சம் 39 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அறிவு சார் மைய கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டார்.

அப்போது மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, நகர் மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு, நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story