வேளாண்துறையை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தரமற்ற நிலக்கடலை விதை வழங்குவதாக கூறி வேளாண்துறையை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரமற்ற நிலக்கடலை விதை வழங்குவதாக கூறி வேளாண்துறையை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு தரமற்ற நிலக்கடலை விதை வழங்குவதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இருந்து கையில் அரிவாள், மண் வெட்டி, கடப்பாறை, பாணலில் நிலக்கடலையை ஏந்திய படி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலக முன்பு நின்று அரிவாள், மண் வெட்டி, கடப்பாறை, நிலக்கடலை ஆகியவற்றிக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து அவர்கள் தரமற்ற நிலக்கடலை வழங்குவதாக கூறி வேளாண்மை துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.=====