கிராம நிர்வாக அலுவலர் கொலையில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கிராம நிர்வாக அலுவலர் கொலையில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலையில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

கிராம நிர்வாக அலுவலர் கொலையில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கிராம நிர்வாக அலுவலர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). கடந்த மாதம் 25-ந்தேதி அலுவலகத்தில் இருந்த அவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலியாவூர் வேதகோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதை கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்று, ராமசுப்பு, மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான ஆவணங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஒப்படைத்தார்.


Next Story