கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x

கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

ராதாபுரம் யூனியன் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன்கிருபாநிதி தலைமை தாங்கினார். பற்றாளர் பணி மேற்பார்வையாளர் இந்திரா, ஊராட்சி துணைத்தலைவர் உவரி ஏ.கே.ஏ.ராஜன் கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் 15 வது மத்திய நிதிக்குழு மானிய பணிகள் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். முன்னதாக பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன்கிருபாநிதி சுதந்திர தினவிழா தேசியக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


Next Story