ஊராட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்


ஊராட்சி தினத்தையொட்டி  கிராம சபை கூட்டம்
x

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி தினத்தையொட்டி பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

கிராம சபை கூட்டம்

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் பேரூராட்சி 15-வார்டு பகுதிகளிலும் பேரூராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சின்னுசாமி, துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினா். பேரூராட்சியின் செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி சபை கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். மேலும் கூட்டத்தில் குடிநீர், சாலை, மின்விளக்கு, பொது கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகள் அமைப்பது, கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் வீடுகள் வழங்க கண்டறியும் பணியை செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மோகனூர்

மோகனூர் ஒன்றிய பகுதிகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. செங்கப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வசித்தனர். அதேபோல் கே. புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சின்னம்மாள் தலைமை தாங்கினார். மணப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி சின்னத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன் கலந்து கொண்டார். ராசிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் தலைமையிலும், பேட்டப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குப்பாயி கந்தசாமி தலைமையிலும், காளிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தலைமையிலும், இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி கலந்து கொண்டார். அதேபோல் அரூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி பெரியண்ணன் தலைமையிலும், வலையபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி சண்முகம் தலைமையிலும், லத்துவாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி ரஜினி ஜெயின் தலைமையிலும், இதற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். அனைத்து ஊராட்சியிலும் நடைபெற்ற கிராம சபா கூட்டங்களிலும், கொரோனா காலத்தில் தங்கு தடை இன்றி செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள், வேளாண்மை துறையினர், வருவாய் துறையினர், கூட்டுறவு துறையினர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி காலனி மாரியம்மன் கோவில் திடலில் நடந்தை ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், நடந்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி, வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு ஏராளமான ஆண்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரியசுரம்பாளையம் பகுதியில் இயங்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் கல்குவாரியை மூட வேண்டும் என ஒரு பகுதி பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இ்ந்த நிலையில் கடந்த 2 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இ்தையடுத்து நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து ஒரு பகுதியினர் கிராம சபை கூட்டம் நடைபெற்றதாகவும், அவற்றில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கையெழுத்து வாங்கினர். அப்போது அதை தடுக்க முயன்றபோது ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர் திலகவதி (வயது38) என்பவரை தாக்கினர். இதில் அவருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த நல்லூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் கையெழுத்துப் போட்டப்பட்டு தீர்மானம் அனைத்தும் ஏற்கப்பட்டதாக கூறினார். இதையடுத்து தூய்மை பணியாளரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி சார்பில் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மொளசி

மொளசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மொளசி ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பிரியா சுரேஷ், துணைத் தலைவர் சந்திரசேகர், வார்டு உறுப்பினர்கள் கல்யாணி சந்திரன், அமுதா மூர்த்தி, சரஸ்வதி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மொளசி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், வேளாண்மை துறை அலுவலர் குப்புசாமி, ஊராட்சி செயலாளர் உமா சங்கர், திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராசு, ஊராட்சி பணிதள பொறுப்பாளர்கள் தூய்மை காவலர்களுக்கு மொளசி ஊராட்சி மன்றத்தின் சார்பாக சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. மொளசி ஊராட்சி மகளிர் சிறந்த குழுவிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மல்லிகா, பல்வேறு துறையை சார்ந்த அரசு துறை அதிகாரிகள், மகளிர் குழு தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story