சுதந்திர தினத்தையொட்டி கொள்ளிடத்தில் கிராம சபை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ம் கொள்ளிடத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே மாங்கனம்பட்டு கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரஸ் நேவ் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார், குழு உறுப்பினர் பரகத்நிஷா,பாசன ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில், கோபால சமுத்திரம் ஊராட்சியில் தலைவர் வசந்தி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சுதந்திர தினத்தையொட்டி
Related Tags :
Next Story