சுதந்திர தினத்தையொட்டி குத்தாலம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்


சுதந்திர தினத்தையொட்டி குத்தாலம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி குத்தாலம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தங்கராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் செல்வராஜ் வரவேற்றார். மகளிர் திட்ட சமூக வள்ளுனர் நவிநாயகி தீர்மானங்களை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நிவேதா முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், கஜேந்திரன், தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் கண்ணதாசன், கிராம நிர்வாக அதிகாரி அம்சம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்



Next Story