மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்


மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
x

சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

கடலூர்

கடலூர்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தினை, ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். இக்கிராம சபை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story